2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

கொழும்பு பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டம்

Kogilavani   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட கொழும்பு, மத்திய கொழும்பு ஆகிய இரண்டு தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கும் கொழும்பு பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்று காலை டாம் வீதி, கொழும்பு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கொழும்பு பிரதேச செயலக ஒருங்கிணைப்பு  குழு இணைத்தலைவர்களாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க,  தேசிய ஒருங்கிணைப்பு இராஜாங்க அமைச்சர்  ஏ.எச்.எம்.பௌசி ஆகியோர் கலந்துகொண்டனர்.

கொழும்பு பிரதேச செயலாளர் டி.பி.விக்கிரமசிங்கவின் வழிகாட்டலில் நடைபெற்ற இக் கூட்டத்தில் பிரதேசத்தின் அரச நிர்வாக அதிகாரிகள் பெருந்தொகையானோர் கலந்துக்கொண்டனர்.

இக்கூட்டத்தில் உரையாற்றிய  கொழும்பு பிரதேச செயலக அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவர் அமைச்சர் மனோ கணேசன் கூறியதாவது,

வட கொழும்பு, மத்திய கொழும்பு ஆகிய இரண்டு தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கிய இந்த பிரதேச செயலக பிரிவில் சுமார் 350,000 இலட்சம் மக்கள் வாழ்கிறார்கள். இதுவே இந்நாட்டின் மிக அதிகமான மக்களை தொகை கொண்ட பிரதேச செயலக பிரிவு ஆகும். இதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

இங்கே சிங்கள, தமிழ், முஸ்லிம் இனத்தவர் ஒன்றிணைந்து ஐக்கியமாக வாழ்கிறார்கள். நாங்கள் இந்த பிரதேச செயலக பிரிவை முன்மாதிரி பிரதேச செயலக பிரிவாக மாற்றி, முழு நாட்டுக்கும் முன்னுதாரணமாக்கிக் காட்டுவோம்.

இந்நிலைப்பாட்டிலேயே இணைத்தலைவர்களான அமைச்சர்கள் ரவி கருணாநாயக்க, பௌசி ஆகியோரும் உள்ளனர். நாங்கள் மூவரும் இது தொடர்பில் இணைந்து செயற்பட முடிவு செய்துள்ளோம். நாட்டின் நிதி அமைச்சர் எங்களில் ஒருவராக இருப்பதுவும் நல்லதுதானே.

ஒருங்கிணைப்பு குழு என்பது குட்டி அரசாங்கமாக செயற்படவேண்டும். ஆகவே இந்த குழு கூட்டத்துக்கு இந்த பிரதேசத்தின் மக்கள் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து அரச நிறுவனங்களும் சமூகமளிக்க வேண்டும். எதிர்வரும் கூட்டத்தில் கொழும்பு மாநகரசபை, நகர அபிவிருத்தி சபை, தாழ்நில அபிவிருத்தி சபை, நீர் வழங்கல் சபை, மின்சார சபை, பிரதேச பொலிஸ் நிலைய மற்றும் பிரிவு அதிகாரிகள், போதைவஸ்து நிவாரண அதிகாரசபை, மேல் மாகாணசபை செயலாளர் அலுவலகம், தேசிய வீடமைப்பு சபை, கொழும்பு கல்வி வலய அதிகாரிகள் ஆகிய அனைத்து துறையினரையும் அழைக்க வேண்டுமென இணைத்தலைவர்களான நாம் தீர்மானித்துள்ளோம்.

முதல் கூட்டத்துக்கு வருகை தராத அனைத்து அரச அதிகாரிகளும் இரண்டாவது கூட்டத்துக்கு வரவேண்டும். வருபவர்கள் தங்களது நிறுவனங்கள் தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். வருகை தராத அரச அதிகாரிகள் ஒழுங்கு நடவடிக்களை எதிர்நோக்க வேண்டி வரும்.

இதை பிரதேச செயலாளர் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார். இது இந்த கொழும்பு செயலக பிரிவின் முதல் கூட்டம். கடந்த ஒரு வருடமாக இந்த கூட்டம் நடைபெறவில்லை என்றும், இப்போது இது ஓர் ஆண்டுக்கு பிறகு நடைபெறுவதாகவும் பிரதேச செயலாளர் என்னிடம் கூறியுள்ளார். நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும். இனி இதை நாம் கிரமமாக முன்னெடுப்போம். இங்கேதான் மிகப்பெரும் தொகையான மக்கள் வாழ்கிறார்கள்.

எனவே இந்த பிரதேசத்தில் வாக்குகளை பெற்ற அனைத்து கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற, மாகாணசபை, கொழும்பு மாநகரசபை உறுப்பினர்களும் வந்து கலந்துக்கொள்வார்கள்' என நான் எதிர்பார்க்கிறேன்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .