2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

கொழும்பு பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கு வகுப்புத்தடை

Kogilavani   / 2017 மார்ச் 09 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்புப் பல்கலைக்கழக இரு மாணவர் குழுக்களுக்கிடையே, புதன்கிழமை (08) இரவு இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்து, கலைப்பீடத்தைச் சேர்ந்த சில மாணவர்களுக்கு, வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கலைப்பீடத்தைச் சேர்ந்த 2ஆம், 3ஆம் மற்றும் 4ஆம் வருட மாணவர்களுக்கே, இவ்வாறு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக, பீடாதிபதி கலாநிதி அத்துல ரணசிங்க தெரிவித்தார்.

ஆனந்த ராஜகருணா மாவத்தையிலுள்ள கொழும்பு பல்கலைக்கழக மாணவர் விடுதியில் வைத்தே இம் மோதல் இடம்பெற்றுள்ளது. மோதலில் காயமடைந்த நால்வர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருவதாக, வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.

இம் மோதலையடுத்து குறித்த விடுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இந்த மோதலுக்கு, மாணவர்களுக்கான தேர்தலே காரணமெனக் கண்டறியப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கலைப்பிரிவின் முதலாம் வருடம் மற்றும் ஏனைய பீட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள், வழமைபோல் இடம்பெறும் என, பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .