2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

கொழும்பை அண்மித்த பகுதிகளில் 18 மணிநேர நீர்வெட்டு

Princiya Dixci   / 2015 நவம்பர் 24 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.பி.எம். முக்தார்

அம்பதல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் அவசரத் திருத்தவேலைகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் எதிர்வரும் 28ஆம் திகதி சனிக்கிழைமை மு.ப 11.00 மணிமுதல் மறுநாள் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.00 மணி வரையிலான நீர் விநியோகம் தடைபடுமென தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

கொழும்பு, தெஹிவளை, கல்கிஸை, புறக்கோட்டை, கடுவலை, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ, கொடிகாவத்த மற்றும் முல்லேரியா ஆகிய பிரதேசங்களுக்கு இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

நீர்வெட்டினால் ஏற்படும் அசௌகரியம் குறித்து வருத்தம் தெரிவிக்கும் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை,  நீரைச் சேமித்து வைத்து பாவிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .