2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

கொலந்தொட்ட வெசாக் வலயத்தை ஜனாதிபதி திறந்துவைத்தார்

Princiya Dixci   / 2017 மே 11 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுவர்ணசிறி கொலந்தொட்ட வெசக் வலயம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால், புதன்கிழமை (10) திறந்துவைக்கப்பட்டது.

காலி முகத்திடலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள உலகின் முதலாவது லேசர் வெசாக் அலங்காரப் பந்தலையும், துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி இதன்போது திறந்து வைத்தார்.

“நாம் கடந்த டிசெம்பர் மாதத்தில், இப்பிரதேசத்தில் உலகிலுள்ள மிகப்பெரிய நத்தார் மரத்தை நிர்மாணித்தோம். இன்று, உலகிலுள்ள முதலாவது லேசர் வெசாக் அலங்காரப் பந்தலைத் திறந்து வைத்துள்ளோம். எங்களுடைய துறைமுக அதிகார சபையானது, பலினனத்தைக் கொண்டு இயங்கும் நிறுவனமாகும். இவர்கள் அனைவரும், சகோதரத்துவதத்துடனும் ஒத்துழைப்புடனும் பணியாற்றுகின்றார்கள். இது, இலங்கைக்கு சிறந்த உதாரணமாகும்” என, நிகழ்வில் கலந்து​கொண்டு உரையாற்றிய அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.

துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சு, இலங்கை துறைமுக அதிகார சபை மற்றும் பௌத்த சங்கம் ஏற்பாடுச் செய்துள்ள கொலந்தொட்ட வெசாக் வலயம், இன்றுடன் (12)  நிறைவடையவுள்ளது.

கொழும்பு சைத்திய மாவத்தை மற்றும் துறைமுக வளாகத்தை மையப்படுத்தி நடைப்பெறுகின்ற இவ்வலயத்தின் முக்கிய அங்கமாக, காலி முகத்திடலில் காட்சிப்படுத்தப்படுகின்ற லேசர் வெசாக் பந்தல் திகழ்கின்றது. இவ்வலங்காரப் பந்தல் மூலமாக, புத்தரின் வாழ்க்கை வரலாறு எடுத்துரைக்கப்படுகின்றது.

ஜேர்மன் நாட்டுத் தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்தி நிர்மாணிக்கப்பட்டுள்ள இவ்வலங்காரப் பந்தலை, பேராசிரியர் பிரபாத் சந்திம உக்வத்த வடிவமைத்துள்ளார். இதற்கான பின்னணி இசையை, விமலஜீவ தொடம்வத்த மற்றும் திமுத்து சிந்தக்க ஆகியோர் அமைத்துள்ளார்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .