2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

கான்ஸ்டபிள் இருவரிடம் கைவரிசை காட்டிய மூவர் கைது

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 03 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடுவல, அத்துருகிரிய பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபிள் இருவரை, நேற்று புதன்கிழமை (02) தாக்கி விட்டு அவர்களிடமிருந்த நகை மற்றும் அலைபேசியைக் கொள்ளையிட்டு தப்பிச் சென்ற மூவரை அத்துருகிரிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கான்ஸ்டபிள் இருவரும் குறித்த பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்துள்ளனர். இதன்போது அவ்வழியில் வந்த மூச்சக்கரவண்டியை நிறுத்தி சோதனை செய்துள்ளனர். 

எனினும், மூச்சக்கரவண்டியில் இருந்த மூவர், கான்ஸ்டபிள் இருவரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளதுடன், ஒரு கான்ஸ்டபிளை அடித்து கீழே விழுத்தி, அவரது தலையை மிதித்தும் உள்ளனர். இதேவேளை, மற்றைய கான்ஸ்டபிளுடைய தங்கச் சங்கிலிலையும் அலைபேசியையும் கொள்ளையிட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து கான்ஸ்டபிள் இருவரும் அத்துருகிரிய பொலிஸாரிடம் தெரிவித்ததையடுத்து குறித்த சந்தேகநபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தங்காலை மற்றும் தபுத்தேகம பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும்; இவர்களிடமிருந்த துப்பாக்கி, கைக்குண்டு ஆகிய மீட்டக்கப்பட்டன. அத்துடன் முச்சக்கரவண்டி கைப்பற்றப்பட்டுள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவத்தில் காயமடைந்த கான்ஸ்டபிள் இருவரும் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .