Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 08, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 மார்ச் 20 , பி.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு நகரின் சில பகுதிகளில் குப்பை சேகரிப்பு மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் (CMC) மூத்த உறுப்பினர் மகேந்திர டி சில்வா இன்று தெரிவித்தார்.
கங்காராம பிரதேசம், நாரஹேன்பிட்டி, பொரளை மற்றும் தெமட்டகொட பிரதேசங்களில் குப்பைகளை சேகரிக்கும் பாரவூர்திகளில் எரிபொருள் தீர்ந்துள்ளதால் குப்பை சேகரிப்பு ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கழிவுகளை அகற்றுவதற்கு தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்ட மற்ற பகுதிகளில் சேவை முன்னெடுக்கப்படுவதாகவும், எனினும், மேற்குறிப்பிட்ட இந்த பகுதிகளில் குப்பை சேகரிப்பு CMC மூலம் செய்யப்படுகிறது.
தனியார் ஒப்பந்ததாரர் லொரிகளுக்கு தேவையான எரிபொருளை கையில் எடுத்துள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எரிபொருள் பிரச்சினை காரணமாக கொழும்பு நகரில் குப்பைகள் சேகரிக்கப்படுவது மார்ச் முதல் வாரத்திலும் பாதிப்பு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது. (R)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago