Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 நவம்பர் 22, வெள்ளிக்கிழமை
Editorial / 2023 பெப்ரவரி 26 , பி.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு நகரின் பாதுகாப்பு பன்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. படையினருக்கு மேலதிகமாக இராணுவத்தின் கலகமடக்கும் பிரிவினரும் களத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு நடவடிக்கை மற்றும் பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதனை தடுப்பதற்காக, வீதிகள் பல பூட்டப்பட்டுள்ளன.
கொழும்பில், வைத்தியசாலை சுற்றுவட்டம், பித்தள சந்தி, யூனியன் பிளேஸ், கொள்ளுப்பிட்டி உள்ளிட்ட இடங்களிலுள்ள வீதிகள் பூட்டப்பட்டுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டமும் பேரணியும், தாமரை தடாகம் பக்கத்தில் இருந்து ஆரம்பமாகியுள்ளது. அந்த சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பேரணியால், கொழும்பு கோட்டை, நகர மண்டபம், கொள்ளுப்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸ், இராணுவத்தின் கலகமடக்கும் பிரிவு, விசேட அதிரடிப்படை ஆகியனவும் களத்தில் குவிக்கப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago