Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Editorial / 2017 மே 23 , பி.ப. 06:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
துஷித குமார டி சில்வா
பேருவளை சுகாதார வைத்திய அதிகாரப் பிரதேசத்தில், இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் மே மாதம் 21ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மாத்திரம், 670 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனரெனவும் அவர்களில் ஐவர் உயிரிழந்துள்ளனரெனவும், களுத்துறை தேசிய சுகாதார வைத்திய நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் சுமல் நந்தசேன தெரிவித்தார்.
டெங்குக் காய்ச்சலின் தாக்கம், பேருவளை மீன்பிடித் துறைமுகத்தை அண்டிய பிரதேசத்திலேயே அதிகமாகக் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 22ஆம் திகதியன்று, பேருவளை பிரதேச செயலகத்தில், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் இடம்பெற்ற, டெங்குத் தாக்கம் தொடர்பான கலந்துரையாடலின் போது, பேருவளை மீன்பிடித் துறைமுகப் பகுதியில் பயன்படுத்தாது கைவிடப்பட்டுள்ள மீன்பிடிப் படகுகள் காரணமாகவே, டெங்கு நுளம்புகள் பரவி வருகின்றமை தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டது.
இதனால், அங்கு பயன்படுத்தாத நிலையில் காணப்படும் 35 படகுகளை, அரச செலவில், புதத்லம பிரதேசத்துக்கு கொண்டுசென்று அழித்துவிடுவதற்கு, அமைச்சர் ராஜித்த ஆலோசனை வழங்கியினார். இருப்பினும், இவ்வுத்தரவு இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என்று, பிரதிப் பணிப்பாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இந்நாட்களில் பெய்துவரும் மழை காரணமாக, குறித்த படகுகளில் நீர் தேங்கியிருக்கும் நிலை காணப்படுவதாகவும் இதனால், டெங்கு நுளம்புகளின் பெருக்கம் மேலும் அதிகரிக்கக்கூடிய சாத்தியப்பாடுகள் இருப்பதாகவும் சுட்டிக்காட்டிய பணிப்பாளர், இவ்வாறான அபாயகரமான நிலைமையைக் கருத்திற்கொண்டு, மேற்படிப் படகுகளை அங்கிருந்து உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், உரிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த களுத்துறை மாவட்டச் செயலாளர் யூ.டீ.சி.ஜயலால், “பயன்படுத்தாத நிலையில், பேருவளை மீன்பிடித் துறைமுகத்தில் காணப்படும் படகுகளை அங்கிருந்து அகற்ற, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
4 hours ago
7 hours ago
8 hours ago