2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

கூந்தலை கத்திரித்த பெண் கைது

Editorial   / 2017 ஜூலை 05 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

துஷித குமார டி சில்வா

அளுத்கம, தர்கா நகரில் உள்ள வர்த்தக நிலையமொன்றுக்குள் பொருட்களை வாங்குவதற்காகச் சென்றிருந்த பெண்ணொருவரின் நீண்ட கூந்தலை, மற்றொரு பெண் கத்திரித்த சம்பவம் தொடர்பிலான முறைப்பாடு, அளுத்கம பொலிஸில் செய்யப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரான அந்த பெண், நீண்ட கூந்தலை இழந்த அந்த பெண்ணுக்கு 50 ஆயிரம் ரூபாயை வழங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணும், கூந்தலை இழந்த பெண்ணும் இனக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர் என்றும் அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் அளுத்கம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜயசம்பம் ரணசிங்கவின் ஆலோசனையின் பேரில், பெண் பொலிஸ் பிரிவின் அதிகாரி உள்ளிட்ட பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .