Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 06 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ஜெயரட்னம்
களுத்துறை மாவட்டத்தில், பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் வறுமைக் கோட்டின் அடிமட்டத்தில், வாழ்ந்து வரும் தோட்டப் புற மக்களிடையே, அறுகிவரும் பாரம்பரிய கலை, கலாசார, தமிழ் மொழிப் பற்று மற்றும் சுய மனைப் பொருளாதாரதை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுவரும் "களுத்துறை மாவட்ட விழி மகளீர் அணியினர், இதில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளனரென, அதன் ஸ்தாபகர் ஹரன் கணகேஸ்வரன் தெரிவித்தார்.
களுத்துறை மாவட்டத்தில் காணப்படும், 52 தோட்டங்களைச் சேர்ந்த 146 பிரிவுகளில், ஆங்காங்கே சிறு சிறு குழுக்களாக பிரிந்து பெரும்பான்மை மக்கள் மத்தியில், வெளி உலகத் தொடர்பின்றி வாழ்ந்துவரும் தோட்டப் புற தமிழ் மக்களிடையே , கல்வி, சுகாதாரம், விளையாட்டு மட்டுமின்றி தமது தமிழ் கலைக் கலாசார நிகழ்வுகளை ஊக்குவித்து வருகின்றனர்.
இப்பகுதியில் வாழ்ந்துவரும் தமிழ் மக்கள், பிற இன பாரம்பரிய, கலை கலாசார நாகரீகம், மொழி என்பவற்றின் மீது மோகம் கொண்டு அதன்பால் ஈர்க்கப்பட்டு அவற்றை பின்பற்றுவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றமை வேதனைக்குரிய விடயமாகுமென, ஹரன் கணகேஸ்வரன் தெரிவித்தார்.
இதனைக் கருத்திற்கொண்டு களுத்துறை, புலத்சிங்கள, அகலவத்தை மற்றும் மத்துகமைப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு ட்பட்ட பகுதியில் வாழும் மக்கள் மக்கள் மேற்படி விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன், மிகவும் வறுமை நிலையில் வாழும் மக்களின் வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய வகையில் சுய தொழில் அடிப்படையில் தமிழ் பாரம்பரிய உணவு வகைகளை தயாரித்து , பெரும் பான்மை சமூகத்தினர் மத்தியிலும் தோட்டபுற மக்களிடையே விற்பனை செய்து வருகின்றனர்.
இதன் காரணமாக நாள் ஒன்றுக்கு 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை இலாபத்தை பெற்று வருவதாக, இல்லத்தரசிகள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு சுயதொழில் மூலம் பெறப்பட்ட இலாபத்தின் ஒரு பகுதியையும் மேலும் மகளிர் அணியினரும் முன்வந்து அப் பிரதேச நலன் விரும்பிகளிடம் இருந்து சேகரிக்கப்பட்ட ஒரு தொகைப் பணத்தை, மத்துகமை பல்லேகொடை தோட்டத்தில் வசிக்கும் இளைஞர் ஒருவரின் சிறுநீரக மாற்று சத்திர சிகிச்சைக்காக வழங்க முன்வந்ததுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
44 minute ago
52 minute ago
54 minute ago