2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

களனிப் பல்கலையில் சிரேஷ்ட மாணவர்களுக்கு விரிவுரை மறுப்பு

Princiya Dixci   / 2016 மார்ச் 15 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

பகிடிவதை உட்பட துர்நடத்தைகளைக் காரணம் காட்டி, மறு அறிவித்தல் வரை, இரண்டாம் மூன்றாம் மற்றும் நான்காம் வருட மாணவர்களுக்குக் கற்பிக்கப் போவதில்லையென களனிப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தீர்மானித்துள்ளர். 

சிரேஷ்ட மாணவர்கள் தொடர்ச்சியாக முதலாம் வருட மாணவர்களைப் பகிடிவதை செய்வதாலும் விரிவுரையாளர்களை மிரட்டுவதாலும் பல்கலைக்கழக நிர்வாகம் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதென களனிப் பல்கலைக்கழக மாணவர் விவகாரப் பணிப்பாளர் டாக்டர் சமிந்த அபயசிங்க கூறினார். 

அரசியல் கட்சி சார்ந்த சக்திகளால் வழிநடத்தப்படும் சிரேஷ்ட மாணவர்கள், முதல் வருட மாணவர்களின் கல்வியைக் குழப்பிவிட்டு பிரச்சினைகளைத் தோற்றுவிக்க முயல்வதாகத் தெரிகின்றது என அவர் கூறினார். 

இவ்வாறான பிரச்சினைகளைத் தீர்க்க நல்லெண்ணத்துடன் செயற்பட்ட விரிவுரையாளர்களை, சில சிரேஷ்ட மாணவர்கள் மிரட்டினர் எனவும் அவர் கூறினார். 

முதல் வருட மாணவர்களுக்கு விரிவுரைகள் நடத்தப்படும். 

இதேவேளை, சிரேஷ்ட மாணவர்களுக்கான பரீட்சைகள் திட்டமிட்டபடி அதே நாட்களில் நடைபெறும். 

குற்றம் காணப்படும் சிரேஷ்ட மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .