2025 ஏப்ரல் 24, வியாழக்கிழமை

கட்டுரைப் போட்டிக்கு ஆக்கங்கள் கோரல்

Princiya Dixci   / 2016 மார்ச் 01 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக நீர்த் தினத்தை முன்னிட்டு, மாணவர்களுக்கிடையே கட்டுரைப் போட்டியொன்றை நடத்தவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

கட்டுரைகள் எழுத வேண்டிய தலைப்புகள்:

-நிலையான அபிவிருத்திக்காக நீர்
-நீர் பற்றாக்குறைக்கு  முகங்கொடுப்போம்   
-குடிநீர் மற்றும் சிறுநீரக நோய் 
-ஆரோக்கியமான வாழ்வுக்குச் சுத்தமான நீர் 
-நீர் மாசடைதலைத் தவிர்ப்போம்
-நீர் வளமுள்ள பிரதேசங்களைப் பாதுகாப்போம்

என்ற தலைப்புகளில் எவையேனும் ஒன்றைப் பற்றி 350 சொற்களுக்குக் குறையாமல் கட்டுரை எழுத வேண்டும். 

மும்மொழியிலும் இடம்பெறும் இப்போட்டியில் முதலாம் இடத்தைப் பெறுவோருக்கு 15,000 ரூபாயும் இரண்டாம் இடத்துக்கு 10,000 ரூபாயும், மூன்றாம் இடத்தைப் பெறுவோருக்கு  75,000 ரூபாயும் வழங்கப்படும்.

நீங்கள் அனுப்ப வேண்டிய கட்டுரைகளை பாடசாலை அதிபரின் சிபாரிசுக் கையொப்பத்துடன், உத்தியோகபூர்வ முத்திரைகளை ஒட்டி நேரடியாகவோ அல்லது மக்கள் தொடர்புப் பிரிவு , தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை, காலி வீதி, இரத்மலானை என்ற முகவரிக்கு தபால் மூலமாகவே அனுப்பமுடியும்.

மேலதிக தகவல்களுக்கு 011-2635254/ 011-2626532 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளவும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .