Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 மார்ச் 11 , பி.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
என். ஜெயரட்ணம்
களுத்துறை நகரசபையின் ஐ.தே.க உறுப்பினர்கள் இருவரின் பதவிகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, ஐ.தே.க பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தீர்மானங்கள், கொள்கைகளுக்கு எதிராக, செயற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில், ஐ.தே.கவின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜேமானவின் வேண்டுகோளுக்கமைய, ஐ.தே.க செயற்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக, அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நகரசபையின் முன்னாள் தலைவர் மொஹம்மத் மஹ்ரூப் மொஹம்மத் ஜவுபர் மற்றும் மொஹம்மத் ஃபெரோஸ் மொஹம்மத் பஸ்லான் ஆகியோரின் பதவிகள் இவ்வாறு இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு, எமது வட்டாரத்தில் அதிகபடியான வாக்குகளைப்பெற்று, களுத்துறை நகரசபைக்குத் தெரிவாகிய எம்மை நீக்கிவிட்டு, தேர்தலில் தோல்வியுற்றவர்களை இணைத்துக்கொள்கின்றனர். இதன்மூலம், ஐ.தே.க அடைந்துவரும் பின்னடைவு மேலும் வலுவடைய இடமுண்டென, நகரசபையின் முன்னாள் தலைவர் ஜவுபர் மவ்ரூப் தெரிவித்தார்.
களுத்துறை நகர மண்டபத்தில், நேற்று முன்தினம் (10) நடைபெற்ற மாதாந்த ஒன்று கூடலின்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது கருத்துரைத்த களுத்துறை நகர சபை தலைவர் அல்ஹாஜ் மொஹம்மத் அமீர் நசீர், இவ்விருவரும் ஐ.தே.கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்று, ஐ.தே.கட்சிக்கு எதிராக எதிர்தரப்பினருடன் இணைந்து, கட்சியின் தீர்மானங்கள் மற்றும் கொள்கைகளுக்கு எதிராக செய்த சதியின் பின் விளைவே இதுவாகும். கட்சியின் மேலிடம் எடுத்த தீர்மானத்தை மதித்து செயற்பட வேண்டியது எமது கடமையாகும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .