Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2015 நவம்பர் 03 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடைபெறப் போகும் உள்ளூராட்சி மன்றத்தேர்தல்களின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களும் ஐக்கிய தேசியக் கட்சி வசமாகுமென்பதில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடமில்லை. ஊவா மாகாண சபையின் ஆட்சியை ஐக்கிய தேசியக் கட்சியின் வசமாக்குவதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. வெகுவிரைவில் அதற்கான ஏற்பாடுகள் முன்னேடுக்கப்படுமென்று, பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்ஜித் மத்தும பண்டார தெரிவித்தார்.
மொனராகலை, மெதகமைவில் திங்கட்கிழமை (02) நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்தாவது,
எமது நாட்டு ஜனாதிபதியை தெரிவு செய்தவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியினரே. இதனை எமது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நினைவுப்படுத்திக்கொள்ளல் வேண்டும்.
ஊவா மாகாண சபை ஆட்சியை, மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிடம் ஒப்படைந்தமையானது தவறாகும்.
இதனை எம்மால் எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஊவா மாகாண சபையின் ஆட்சியின் உறுப்பினர்களது ஆதரவு தற்போது ஐக்கிய தேசியக் கட்சிக்கேயுள்ளது. இந்த ஆதரவு புறந்தள்ளப்பட்டு, மகாண சபை ஆட்சி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிடம் ஒப்படைத்தமையானது சட்டவிரோத செயற்பாடாகும்.
ஊவா மாகாண முதலமைச்சராக சசிந்திரிகா ராஜபக்ஷ, அதன் பின்னர் ஹரின் பெர்ணாந்து, தற்போது சம்பந்த நாயக்க என்று மூன்று பேர் ஒரு வருடத்தில் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். மஹிந்த ராஜபக்ஷவின் ஊழல் மிகு யுகத்தை ஊவா மாகாண சபை மூலம் இல்லாதொழித்தது, மக்களாட்சியை ஏற்படுத்தியது ஐக்கிய தேசியக் கட்சியாகும்.
அதற்கு முன்பு, ஊவா மாகாண சபையின் முதலமைச்சர் பதவியை ஐக்கிய தேசியக் கட்சி பொறுப்பேற்றவுடன், சபையின் ஆட்சியும் ஐக்கிய தேசியக் கட்சி வசமாகும் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago