Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Kogilavani / 2017 பெப்ரவரி 24 , மு.ப. 06:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
மறைந்த, அங்கவீனமான மற்றும் சிவில் ஊழியர்களின் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள், புத்தகம், பண உதவி மற்றும் புலமைப்பரிசில்கள், இராணுவ சேவைப் பெண்கள் அமைப்பினால் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன.
மக்கள் வங்கியின் உதவியுடன், பாதுகாப்பு சேவைகள் கல்லூரிக் கேட்போர் கூடத்தில் வைத்து இவை வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில், பிரதம அதிதியாக இராணுவ சேவைப் பெண்கள் அமைப்பின் பணிப்பாளர் நயன டி சில்வா கலந்துகொண்டார்.
தரம் ஒன்றிலிருந்து பல்கலைக்கழகம் செல்லும் 80 மாணவர்களுக்கு, இதன்போது புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், தரம் ஒன்றிலிருந்து தரம் ஐந்து வரையான மாணவர்கள் 20 பேருக்கு சேமிப்புக் கணக்கு வைப்பாக, 25,000 ரூபாய் வழங்கப்பட்டது.
அத்துடன், தரம் ஒன்றிலிருந்து க.பொ.த உயர்தரம் வரையிலான 47 மாணவர்களின் கற்றல் செலுவுக்கான தலா 30,000 ரூபாய் வழங்கப்பட்டது.
மேலும், பல்கலைக்கழக மாணவர்களுக்கு 50,000 ரூபாய் பண உதவி வழங்கப்பட்துடன், பல்கலைக்கழக்கத்தில் திறமையாகப் படிக்கும் மாணவர்களுக்கு 89,700 ரூபாய் பெறுமதியான மடிக் கணினியும் 50,000 ரூபாய் ஊக்குவிப்புத் தொகையும் வழங்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago