Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 06:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்வித்துறையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை நீக்கி சகல பிள்ளைகளுக்குமான இலவசக்கல்வி உரிமைகளைப் பாதுகாப்பதே புதிய அரசாங்கத்தின் நோக்கமாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நுகேகொட சமுத்திராதேவி மகளிர் வித்தியாலயத்தில் நேற்று புதன்கிழமை (28) நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாதம் மற்றும் இயற்கை அனர்த்தங்களுக்கு முகங்கொடுத்த பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருகின்றது.
இப்பிரதேசங்களில் உள்ள மாணவர்களின் கல்வித்தரம் ஏனைய பிரதேசங்களில் உள்ள மாணவர்களின் கல்வித்தரத்துக்கு உயர்த்தப்படும்.
நாட்டில் உள்ள சகல பிள்ளைகளுக்கும் இலவசக் கல்வியின் சிறந்த பெறுபேறுகளை வழங்குவது எல்லோரினதும் பொறுப்பாகும்.
அரசாங்கம் தேவையான வசதிகளை பிள்ளைகளுக்கு வழங்கியுள்ள நிலையில், அவர்களது கல்விக்கான ஊக்குவிப்புக்களை வழங்கவேண்டியது பெற்றோர்களுடைய பொறுப்பாகும்.
9 மாகாணங்களிலும் வாழ்கின்ற மக்களின் எழுத்தறிவை அதிகரிப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும். எதிர்கால கல்வித்திட்டங்களின் ஊடாக நாட்டின் சகல மக்களினதும் எழுத்தறிவு வீதத்தை 100 சதவீதத்துக்கு அதிகரிக்க எதிர்பார்த்துள்ளோம் என்றார்.
2014ஆம் ஆண்டு காலப்பகுதியில் விசேட திறமைகளை வெளிப்படுத்திய சமுத்திராதேவி மகளிர் வித்தியாலய மாணவிகளுக்கு பரிசில்களையும் ஜனாதிபதி இதன்போது வழங்கி வைத்தார்.
அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய மற்றும் மாகாண அமைச்சர் காமினி திலக்க சிறி ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago