Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Thipaan / 2015 ஒக்டோபர் 26 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1987ஆம் ஆண்டின் 46ஆம் இலக்கச் சட்டத்தின் பிரகாரம் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் புதிய நிர்வாக சபை தெரிவுசெய்யப்பட்டுள்ளது. இதனை இலங்கைப் பத்திரிகை பேரவை கடந்த 24ஆம் திகதி சனிக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
புதிய நிர்வாக சபையைத் தெரிவுசெய்வதற்கான வேட்பு கடந்த 24ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆட்சேபனைக்கான நேரத்தில் எந்தவித ஆட்சேபனையும் முன்வைக்கப்படாததையடுத்தே பேரவையின் தலைவர் கொக்கல வெல்லல பந்துல, பிரதி ஆணையாளர் நிரோஷன தம்பவிட்ட ஆகியோர் இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் புதிய நிர்வாக சபையை உத்தியோகபூர்வமாக அறிவித்தனர்.
இதன்படி சபையின் புதிய தலைவராக தீப்தி பிரமித்தா அதிகாரி (திவயின), பொதுச் செயலாளராக ஜே.ஜி.ஸ்டீபன் (வீரகேசரி), பொருளாளராக புலித்த பிரதீப் குமார (திவயின), தேசிய அமைப்பாளராக காமினி பண்டாரநாயக்க (லேக் ஹவுஸ்), உப- தலைவர்களாக கே.குணராசா (லேக்ஹவுஸ்), பிரசன்ன சஞ்சீவ தென்னகோன் (லங்காதீப), உப- செயலாளர்களாக ஏ.பி.மதன் (தமிழ் மிரர்), சந்தன காரியவசம் (ரிவிர), உப- பொருளாளர்களாக லசந்த வீரகுலசூரிய (லக்பிம ), அஜித் அழகக்கோன் (திவயின) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை சபையின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களாக ஆரியரத்ன ரணபாகு (லங்காதீப), மொஹமட் மின்ஹாஜ் (வீரகேசரி), கே.ஜி.கௌஷிகா கீத்தானி (சுயாதீன ரூபவாஹினி), நுவன் கொடிக்கார (ரிவிர), சமன் பிரியங்கர நம்முனிகே (லக்பிம), ருவந்தி காரியவசம் (மௌபிம), மர்லின் மரிக்கார் (தினகரன்), வினோஷா நிஷாதினி கிரிபந்தேனிய
(ரூபவாஹினி ), உதித்த குணவர்தன (டெய்லி நியூஸ்), சுஜித் கோனார (ரிவிர), பண்டார விஜேரத்ன (தெரண), மொஹமட் நிலாம் (லேக் ஹவுஸ்), இந்திக வீரகோன் (சுயாதீன தொலைக்காட்சி), சீசர் சுதசிங்க (லேக் ஹவுஸ்), சந்துன் கமகே (லங்காதீப), ரணில் தர்மசேன (திவயின), மனோஜ் அபேதீர (திவயின), நிமல்சிரி எதிரிசிங்க (லக்பிம), ஸ்ரீலால் கோமஸ் (அமைச்சின் செயலாளர்), திஸ்ஸ குணதிலக்க (திவயின), சஜித் ரணசிங்க (சுவர்ணவாஹினி), கயான் குமார வீரசிங்க (லக்பிம) மற்றும் ஷானுக்க கருணாரத்ன (ஹிரு)ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
புதிய நிர்வாக சபையானது 24ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 1.30க்கு அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago