Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 23, புதன்கிழமை
Editorial / 2017 நவம்பர் 02 , மு.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடிப்படை – சாத்தியவள அறிக்கை மற்றும் சாத்தியவள அறிக்கைக்கான ஆலோசனை சேவை ஒப்பந்தத்தைத் தனியார் நிறுவனத்துக்கு வழங்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
மாநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
மேல் மாகாண வலயத்தினுள் இலகு ரக ரயில் வீதிகள் 06 தொடர்பில் அடிப்படை – சாத்தியவள அறிக்கை மற்றும் சாத்தியவள அறிக்கைக்கான ஆலோசனை சேவை ஒப்பந்தத்தை வழங்குவதற்காக சர்வதேச விலைமனுக்கள் கோரப்பட்டன.
அதன் பிரதிபலனாக 05 சர்வதேச நிறுவனங்கள் தமது விலை மனுக்களை முன்வைத்துள்ளன. இதற்கமைய, அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள ஆலோசனை கொள்முதல் குழுவின் சிபாரிசின் பெயரில் உரிய ஆலோசனை சேவை வழங்கும் ஒப்பந்தத்தை, 202 மில்லியன் ரூபா தொகைக்கு M/s Seoyoung Engineering Co. Ltd., (SYE), Saman Corporation நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பில், அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க முன்வைத்த யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago