Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 ஓகஸ்ட் 08 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸட்.ஷாஜஹான்
நீர்கொழும்பு - கொச்சிக்கடை பொலிஸ் பிரிவில், தோப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள சிங்கமா காளி அம்மன் ஆலயம், தீக்கிரையாகியுள்ளது.
இச்சம்பவம்,நேற்று (07) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இதன் காரணமாக ஆலயத்தின் அறையில் வைக்கப்பட்டுள்ள அம்மனின் சேலைகள், சிலைகள், படங்கள், புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் என்பன தீயினால் எரிந்து சாம்பலாகியுள்ளன.
சம்பவம் தொடர்பாக கோவில் குருக்களின் மனைவியினால், கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, கோவில் குருக்களின் மனைவி கருத்துத் தெரிவிக்கையில்,
“இன்று கோவிலில் பூஜை இடம்பெற்று இரவு 7 மணியளவில் முடிவடைந்தது. அதன் பின்னர் நான் கோவிலுக்கு அருகில் உள்ள எனது தயாரின் வீட்டுக்கு சென்றுவிட்டு 15 நிமிடத்தில் திரும்பி வந்து பார்த்தபோது கோயில் அறையினுள் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. உடனே நானும் எனது மகனும் தீயை அணைத்தோம். ஆயினும், கோவில் அறையில் வைக்கப்பட்டிருந்த அம்மனின் சேலைகள், சிலைகள், படங்கள், புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் முழுமையாக தீயினால் எரிந்து போய்விட்டன.
“அந்த அறையில் தீ ஏற்படுவதற்கான வாய்ப்பு கிடையாது. இது தொடர்பாக கொச்சிக்கடை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளோம்” என்றார்.
இச்சம்பவம் தொடர்பாக கொச்சிக்கடை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .