2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை

ஆயுர்வேத நிலையமென்ற பெயரில் விபசாரம்: ஐந்து பெண்கள் கைது

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆயுர்வேத நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபசார விடுதியை வெலிக்கடப் பொலிஸார் சுற்றிவளைத்ததில் ஐந்து பெண்கள், கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

நேற்று திங்கட்கிழமையன்று (15) வெலிக்கட பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கைமய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் கூறினர். 

இந்த விபசார விடுதி வெலிக்கட, புத்கமுவ வீதியில் இயங்கி வந்ததாகவும் இதை நடத்திச் சென்ற பெண்ணொருவர் உட்பட  விபசாரத்தில் ஈடுபட்டு வந்த நான்கு பெண்களை பொலிஸார் இதன்போது கைதுசெய்துள்ளதாகத் தெரிவித்தனர்.

நுவரெலியா, புளத்சிங்கள மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 23, 27, 28 மற்றும் 31 வயதான பெண்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .