2025 ஏப்ரல் 23, புதன்கிழமை

அலைமோதும் சடலங்கள்; நோயாளிகள் அவதி

Editorial   / 2017 ஜூலை 23 , பி.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட்.ஷாஜஹான்

 

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் விசேட டெங்கு இரத்தப் பரிசோதனை பிரிவில், இறந்தவர்களின் சடலத்தை உறவினர்களிடம் கையளிப்பதற்காக மக்களின் பார்வையில் தெரியும்படி வைக்கப்படுவதன் காரணமாக, அங்கு இரத்தப் பரிசோதனைக்காக வரும் நோயாளிகள், பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருவதாக, விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இரத்தப் பரிசோதனைக்காக வரும் பொதுமக்களுக்கு இரத்தப் பரிசோதனை செய்யப்படும் இரசாயன கூடம் அமைந்துள்ள பகுதியிலேயே, பொதுமக்களின் பார்வைக்குத் தெரியும்படியாக, சடலங்கள் வைக்கப்படுகின்றன.

பரிசோதனை அறிக்கை கிடைக்கும் வரை,  பொதுமக்கள், நோயாளிகளுடன் அங்கு காத்திருக்க வேண்டும்.

டெங்கு நோயாளிகளுக்கு அளப்பரிய சேவையாற்றி வரும் நீர்கொழும்பு  வைத்தியசாலையில், டெங்கு நோயாளிகள் பார்வையில் படும்படியாக, சடலங்களை  வெளியிடங்களில் வைப்பது நல்லதல்ல. அது நோயாளிகளை உள அளவில் பெரிதும் பாதிக்கும் என, மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே, வைத்தியசாலை நிர்வாகம், இந்த விடயத்தைக் கருத்திற்கொண்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .