Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Editorial / 2017 ஜூலை 06 , மு.ப. 11:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
கீழ்த்தரமான அரசியல் சதி ஊடாக, ஆட்சியை கைப்பற்ற முயலும் கனவு பலிக்காது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஆட்சியிலுள்ளபோது கோடிக்கணக்கில் மக்கள் பணத்தையும், அரச சொத்துக்களையும் கொள்ளையடித்து, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, பாரிய ஊழல், மோசடி மற்றும் குற்றம் புரிந்தோர் மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு முயற்சிக்கின்றனர் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அலரிமாளிகையில், நேற்று(05) நடைபெற்ற அனைவருக்கும் நிழல் ”விருசுமித்துறு” படைவீரர் வீட்டு உறுதிகளை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு, ஜனாதிபதி தொடர்ந்து உரையாற்றுகையில்,
நாட்டின் இறைமைக்கும், ஒருமைப்பாட்டுக்காகவும் வீரமிகு படையினர் ஆற்றிய அர்ப்பணிப்புகளால் நாடும், மக்களும் பெற்ற வெற்றியை உறுதிப்படுத்தி முன்னோக்கி செல்வதே இன்று தேவையாக உள்ளது.
நாட்டில் நிலையான சமாதானத்தை கட்டியெழுப்பி, தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கு, தற்போதைய அரசாங்கம் பாடுபட்டுவரும் போது எதிர்காலத்தில் ஆட்சிக்கு வர கனவுகாணும் சில சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். அவ்வாறான சதிகளை தோற்கடிப்பதற்கு நாட்டு மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டுமென்றும் அழைப்பு விடுத்தார்.
வீரமிகு படையினரை, சர்வதேச நீதிமன்றத்துக்கு செல்லவேண்டியிருந்த நிலையை மாற்றி உலகில் எந்தவொரு நாடோ, சர்வதேச அமைப்போ அவர்கள் மீது கை வைக்க முடியாதவாறு சர்வதேசத்தின் ஒத்துழைப்பை பெறுவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
இந்த நாட்டில், ஊடகவியலாளர்களை கொலை செய்து, அவர்களை காணாமல் போகச் செய்து, ஊடக நிறுவனங்களுக்கு தீ வைத்த காலத்தை முடிவுறுத்தி அனைத்து ஊடகவியலாளர்களினதும் உயிர்களை பாதுகாப்பதற்கும், ஊடக நிறுவனங்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்கு தற்போதைய அரசாங்கமே நடவடிக்கை எடுத்தது.
எனினும், தற்போதைய அரசாங்கத்தை விமர்சித்து, நாட்டில் பிரச்சினைகள் இருப்பதாக மக்களுக்கு காட்டுவதற்கு முயற்சிக்கும் சில ஊடக நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பில் கவலையடைவதாகவும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காடினார்.
படைவீரர்கள் நாட்டுக்கு பெற்றுக்கொடுத்த சுதந்திரத்தையும், படைவீரர்களையும் பாதுகாப்பதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதுடன் படைவீரர்களின் நலன்களுக்காக அரசாங்கம் அமுல்படுத்தும் திட்டங்களின் கீழ் மிகவும் குறுகிய காலத்தினுள் படைவீரர்களின் வீட்டுப் பிரச்சினைகளை தீர்த்துவைக்க அரசாங்கத்தால் முடிந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .