Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Kogilavani / 2015 ஒக்டோபர் 23 , மு.ப. 09:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
அடுத்த வருட ஆரம்பத்தில் தேசிய சூழல் மாநாடொன்றை இலங்கையில் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். சுற்றாடல்துறை நிபுணர்கள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட சூழலை விரும்பும் அனைவரும் அதில் பங்குபற்றக்கூடியதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்;.
கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று(22) நடைபெற்ற ஜனாதிபதி சுற்றாடல் பதக்கங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
சூழலின் பெறுமதியை மிகச்சரியாகப் புரிந்துகொண்டு எதிர்காலத் தலைமுறைக்காக அதனைப் பாதுகாப்பதற்கு புதிய அரசாங்கம் மிகுந்த அர்ப்பணிப்போடு உள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, நிலையான அபிவிருத்தி, பசுமைப் பொருளாதாரம் மற்றும் புத்தாக்கப் பொருளாதாரம் தொடர்பான கொள்கைகள் மற்றும் திட்டங்களை வகுக்கும்போது உலகின் அபிவிருத்தியடைந்த பல நாடுகளைப் பார்க்கிலும் இலங்கை முன்னிலை வகிப்பதாகவும் குறிப்பிட்டார்.
அடுத்த வருடம் நடைபெறும் தேசிய சூழல் மாநாட்டில் சூழலுக்காக பங்களிப்புகளைச் செய்த சகலரையும் கௌரவிக்க உள்ளதாகவும் சூழலைப் பாதுகாப்பதற்கான நாடளாவிய தேசிய வேலைத்திட்டத்துக்கு சகலரினதும் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இயற்கையைப் பாதுகாப்பதும் அதனைப் பலப்படுத்துவதும் அனைவரது தேசிய பொறுப்பாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, அதiனை சட்டத்தினால் மேற்கொள்ள முடியாது என்றும் சூழலைப் பாதுகாக்கின்றபோது எமது கடந்தகால பாரம்பரியங்களின் அடிப்படையிலான நல்ல பண்பாடுகள் சட்டத்தைப் பார்க்கிலும் பலமானவை என்றும் குறிப்பிட்டார்.
இன்று பாடசாலைப் பிள்ளைகளுக்கும் அரச நிகழ்வுகளுக்கும் ஜனாதிபதி மாளிகையைப் பயன்படுத்துவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றிருப்பது தொடர்பில் மகிழ்ச்சி தெரிவித்த ஜனாதிபதி, பெரும் நிதியைச் செலவிட்டு அங்கு வசிப்பதைவிட எதிர்காலத் தலைமுறைக்காக அந்த மரபுரிமையைப் பாதுகாத்து வழங்குவதே தமது நோக்கம் என்றும் தெரிவித்தார்.
ஜனாதிபதி சுற்றாடல் பதக்கங்கள் பெறுனர்கள் 71 பேருக்கு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டதுடன், சூழலுக்கான பங்களிப்புகளைப் பாராட்டி இரண்டு ஆசிரியர்களுக்கான விசேட சேவை நினைவுச் சின்னமும் ஜனாதிபதியினால் வழங்கி வைக்கப்பட்டது.
மகாவலி அபிவிருத்தி, சுற்றாடல் பிரதி அமைச்சர் அநுராத ஜயரத்ன, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் லால் மேர்வின் தர்மசிறி ஆகியோரும் பாடசாலைப் பிள்ளைகள், பெற்றோர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago