Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
- சிவாணி ஸ்ரீ
இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின், 17ஆவது அங்கத்துவ மாநாடு, கொழும்பு பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை (16) காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உப- தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை வரலாற்றில் அழியா தடம் பதித்துக்கொண்ட எமது ஆசிரியர் சேவை சங்கமானது, 1977 இல் கல்வித் துறையில் தொழிற் சங்கமாக ஆரம்பிக்கப்பட்டது. அன்றிலிருந்து எமது நாட்டை ஆண்ட சகல அரசாங்கங்களும் உள்நாட்டு, வெளிநாட்டு ஏகாதிபத்திய சக்திகளும் இந்நாட்டின் கல்வியை அவர்களின் தேவைக்கேற்ப செயற்படுத்தியதுடன், இலவசக் கல்வியை இல்லாதொழிப்பதற்காக பாடசாலை அபிவிருத்தி சங்க பிரேரணை, பணம் அறவிடுவதற்கான சுற்றறிக்கை மற்றும் தனியார் பல்கலைகழக பிரேரணை போன்றவற்றைக் கொண்டு வந்தனர்.
1997ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை ஆசிரியர்களின் தீர்க்கப்படாத பாரிய சம்பள முரண்பாடு மற்றும் அவர்களின் பதவி உயர்வு, சம்பள நிலுவை குறைப்புக்கள், வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப சம்பள உயர்வு மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்படாமை போன்ற நிதியியல் விடயங்களை உரித்தாக்குதல், பறித்தெடுத்தல் ஆகியவற்றுக்கு எதிராக எமது சங்கமானது போராடிக் கொண்டிருக்கின்றது.
முக்கியமாக இவ்வருடம் ஆசிரியர் உதவியாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு சிறுதொகை சம்பளம் மட்டுமே கிடைக்கப்பெறுகின்றது. அவர்களுக்கு மேலதிகமாக ஊதியம் எதுவும் கிடைப்பதில்லை. ஆசிரியர் உதவியாளர் என்ற பெயரை நீக்கி சம்பளத்தை அதிகரித்து அவர்களை ஆசிரியர் சேவையில் உள்ளடக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago