2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

15 இடங்களை தனதாக்கியது கெர்க்ஸ்வோல்ட் த.வி

Janu   / 2024 ஜூலை 11 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அகில இலங்கை தமிழ்மொழித்தினம்-2024, பொகவந்தலாவ பிரதேச மட்ட போட்டிகள், சனிக்கிழமை (06) நடைபெற்றன. அதில்,  கெர்க்ஸ்வோல்ட்- இல-2 தமிழ் வித்தியாலயம், 15 இடங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

அதில், ஆறு முதலிடங்கள், மூன்று இரண்டாம் இடங்களும், மூன்றாம் இடங்கள் ஆறும் அடங்குகின்றன.

கெர்க்ஸ்வோல்ட்- இல-2 தமிழ் வித்தியாலய மாணவி எஸ்.கிருஷ்ணாந்தினி வாசிப்பு பிரிவு இரண்டில் முதலாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

  பொகவந்தலாவ சென்.மேரிஸ் மத்திய கல்லூரி மாணவர்களும் 14 முதலிடங்கள் 7 இரண்டாம் இடங்கள் 3 மூன்றாம் இடங்களை பெற்றுக்கொண்டனர்.  ஹொலிரோசரி மகா வித்தியாலயம், எட்டு முதலிடங்களையும், ஒன்பது மூன்றாம் இடங்களையும், மூன்றாம் இடங்கள் மூன்றையும் தனதாக்கிக்கொண்டது.

இந்த மாணவர்களின் வெற்றிக்கு பின்னின்று உழைத்த அதிபர், ஆசிரியர்களை பாடசாலை சமூகம் பாராட்டியுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X