Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 29, செவ்வாய்க்கிழமை
Gavitha / 2021 ஜனவரி 31 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
10ஆம் திகதிக்கு முன்னர் 1,000 ரூபாய் வழங்காவிட்டால், இம்முறை முன்னெடுக்கப்படும் போராட்டம், வேறு வடிவில் அமையும் என்று, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பிருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
நுவரெலியாவில், இன்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த நல்லாட்சியின்போதும், சம்பள விடயத்தில் துரோகம் இழைக்கப்பட்டள்ளத என்றும் அந்த சாபத்தால்தான், ஐக்கிய தேசியக் கட்சி இன்று அழிந்துள்ளது என்றும் அக்கட்சியின் தலைவர், செயலாளர்கள் என எவரும் பாராளுமன்றத்தில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
பட்ஜெட்டில் முன்வைக்கப்பட் திட்டங்கள், அரசாங்கத்தால் நிறைவேற்றப்படவேண்டும் என்றும் அவ்வாறாயின். தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் மத்திரம், எதற்கு கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
அரசாங்கம் சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்திய அவர், கம்பனிகளுக்குத் தேயிலை சபை, திறைசேரி ஊடாக நிவாரணங்களை வழங்கலாம் என்றும் தெரிவித்தார்.
சம்பள நிர்ணயசபை, 6ஆம் திகதி கூடவுள்ளது என்றும் இதன்மூலம், 1,000 ரூபாய் பெறுவதற்கு, முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் ஏனைய தொழிற்சங்கங்களும் இந்த ஒத்துழைப்பை வழங்கும் என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
பெப்ரவரி 10 ஆம் திகதிக்குள், சம்பள உயர்வு கிடைக்கவேண்டும் கூறிய அவர், இல்லையேல் இம்முறை போராட்டம் வேறுமாதிரியாக அமையும் என்றம் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
5 hours ago