2024 டிசெம்பர் 23, திங்கட்கிழமை

ஹட்டன் விபத்து ; சாரதிக்கு விளக்கமறியல்

Janu   / 2024 டிசெம்பர் 22 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டன் மல்லியப்பு சந்தி பிரதேசத்தில் சனிக்கிழமை (21) இடம்பெற்ற தனியார் பேருந்து விபத்தில்  காயமடைந்து பொலிஸ் பாதுகாப்பில், டிக் ஓயா ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த, பேருந்தின் சாரதியை இம்மாதம் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எஸ்.ராம்மூர்த்தி ஞாயிற்றுக்கிழமை (22) உத்தரவிட்டார்.

வைத்தியசாலைக்கு வந்த பதில் நீதவான் சந்தேகநபரான சாரதியின் நிலைமை​ தொடர்பில் வைத்தியர்களிடம் கேட்டறிந்து, வைத்தியசாலையில் தடுத்து வைக்கப்பட்டதுடன், சந்தேக நபர் சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்பில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X