2024 டிசெம்பர் 22, ஞாயிற்றுக்கிழமை

ஹட்டன் பஸ் விபத்து தொடர்பில் அதிர்ச்சி தகவல் வௌியானது

Freelancer   / 2024 டிசெம்பர் 21 , பி.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹட்டனிலிருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று இன்று (21) விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.

ஹட்டனிலிருந்து பயணித்த குறித்த பஸ் ஹட்டன் மல்லியப்பு வாடி வீட்டுக்கருகில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து  விபத்துக்குள்ளானது.

பஸ்ஸில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாகவே விபத்து இடம்பெற்றுதுள்ளது.

பஸ்ஸின் சாரதி , நடத்துனர் உட்பட பயணிகள் 53 பேர் காயமுற்ற நிலையில் டிக்கோயா மற்றும் வட்டவளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

ஹட்டனைச் சேர்ந்த 14 வயதுடைய பாடசாலை மாணவர், 68 வயதுடைய கண்டியைச் சேர்ந்த பெண் மற்றும் மற்றுமொரு பெண் என மூன்று பேர் உயிரிழந்தனர்.

பாடசாலை மாணவன் தனது சகோதரியுடன் மருந்து எடுப்பதற்காக சென்ற போதே இவ்விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்களில் 10 பேர் கண்டி போதனா வைத்தியசாலைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

குறித்த விபத்து தொடர்பாக பஸ் சாரதியிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

பஸ் கட்டுப்பாட்டை இழந்து கதவு திறக்கப்பட்டு தான் பஸ்சில் இருந்து கீழே விழுந்ததாக சாரதி குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், விபத்துக்குள்ளான பஸ்ஸில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கெமரா அமைப்பின் தரவுத்தளத்தை ஹட்டன் பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.

விபத்து நடந்து சிறிது நேரம் கழித்து, ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தி தொடர்புடைய சிசிடிவியை அணுகி காட்சிகள் நீக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X