2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

வீதி விபத்தில் அதிபர் மரணம்

Janu   / 2025 ஏப்ரல் 28 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கந்தேகெதர பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பாடசாலையொன்றின் அதிபர் உயிரிழந்துள்ள சம்பவம் திங்கட்கிழமை (28) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

கந்தேகெதர- அலுகொல்ல  வீதியின் சார்ணியா தோட்ட கொல்லுமண்டி பிரிவில் உள்ள ஆற்றங்கரைப் பிள்ளையார் கோவிலுக்கு அருகில் குறித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து  வடிகானுக்குள் பாய்ந்து விபத்திற்குள்ளானதாக தெரியவந்துள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த, பதுளை மாவட்டத்தின் வியலுவ கல்வி வலயத்திற்குட்பட்ட சார்ணியா இல.01 தமிழ் வித்தியாலயத்தின் அதிபர் ஆ.ரவிச்சந்திரன் (59 வயது)உயிரிழந்துள்ளார்.

குறித்த பாதையில் முன்னால் சென்று கொண்டிருந்த பஸ் வண்டியை முந்திக் கொண்டு பயணிக்க முனைந்த போது விபத்து இடம்பெற்றுள்ளதுடன் விபத்தில் படுகாயமடைந்த அதிபரை உடனடியாக கந்தேகெதர ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இரு பிள்ளைகளின் தந்தையான இவர் இதற்கு முன்னர் கோபோ தமிழ் வித்தியாலயம், சார்ணியா தமிழ் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் அதிபராக கடமையாற்றியுள்ளார். 

சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக சடலம் பதுளை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தேகெதர பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர். 

பாலித ஆரியவன்ச, ஆறுமுகம் புவியரசன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .