2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

வீட்டின் மீது மரம் விழுந்து, வீடு தீப்பிடித்தது

Janu   / 2024 மே 28 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்பொழுது நிலவி வரும் கடும் மழை மற்றும் காற்றுடன் கூடிய மோசமான காலநிலை காரணமாக நுவரெலியா பம்பரகலை பகுதியில், வீடு ஒன்றின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்தமையால் குறித்த வீட்டுக்கு செல்லும்  மின் தடம் அறுந்து விழுந்து வீடு தீப்பிடித்துள்ள சம்பவம் செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்றுள்ளது .

இதனால் வீட்டின் உள் பகுதி முழுமையாக எரிந்துள்ளதுடன் இலத்திரனியல் பொருட்கள் உட்பட அதிகமான பொருட்கள்  சேதமடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதன்போது , குறித்த வீட்டில் வசிப்பவர்கள் வெளியில் சென்றிருந்தமையால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் தீப்பரவலுக்கு மின் ஒழுக்குகே காரணம் எனவும் வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார் .

செ.திவாகரன் டி.சந்ரு,ஆ.ரமேஸ்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .