2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

வாகை விழுந்ததில் தொழிலாளி மரணம்: மூவர் காயம்

Editorial   / 2024 மே 28 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாகை மரமொன்று வேறோடு பெயர்ந்து விழுந்ததில் பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூன்று  பெண் தொழிலாளிகள் படுகாயமடைந்த நிலையில் காவத்தை மற்றும் இரத்தினபுரி பொது வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காவத்தை பொலிஸ் பிரிவில் உள்ள ஓப்பாவத்தை 3 ஆம் பிரிவு தோட்டத்திலேயே வாகை மரம் செவ்வாய்க்கிழமை (28) பிற்பகல் 1 மணியளவில் விழுந்துள்ளது.

தேயிலைச் செடிகளுக்கு உரம் போடும் வேலை முடிந்தப்பின்னர் வீடுகளுக்கு திரும்பும் வேளையிலேயே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

 படுகாயமடைந்த நால்வரும் காவத்தை பொது வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்ட நிலையில்   சிகிச்சை பலனின்றி ஒருவர்  உயிரிழந்தார்.  படுகாயமடைந்த இருவரில் ஒருவர் ஆபத்தான நிலையில் காவத்தை வைத்தியசாலையிலும் மற்றவர் மிகவும் ஆபத்தான நிலையில் இரத்தினபுரி வைத்திய சாலையில் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்

இச்சம்பவத்தில் திருமதி எஸ்.தமிழ் செல்வி(வயது 49)  என்பவரே உயிரிழந்துள்ளார் இவர் ஒரு பிள்ளையின் தாயார் ஆவார்.

படுகாயமடைந்த திருமதி சத்திய வாணி (வயது 36) இரத்தினபுரி வைத்தியசாலையிலும் திருமதி ஜீவராணி( வயது 45). விஜயகுமாரி(வயது 49) ஆகிய இருவரும் காவத்தை  . வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்

உமாமகேஸ்வரி 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .