2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

ரூ . 9,900 மில்லியன் மோசடி: பணிப்பாளர் கைது

Editorial   / 2023 ஒக்டோபர் 28 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 இலங்கை மத்திய வங்கியின் முறையான அனுமதியின்றி போலி நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி 9,900 மில்லியன் ரூபாவை மோசடி செய்ததாக கூறப்படும் நிதி நிறுவனத்தின் பணிப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக நிதி மற்றும் வர்த்தக குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.

கண்டியைச் சேர்ந்த 54 வயதுடைய சந்தேகநபர் நிதி நிறுவனத்தின் பணிப்பாளராகவும் பங்குதாரராகவும் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபருக்கு எதிராக   நம்பிக்கை துரோகம் மற்றும் பணமோசடி ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன்இ சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிதி மற்றும் வர்த்தக குற்றப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .