2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

மீன் லொறி விபத்தில் மூவருக்கு காயம்

Editorial   / 2023 செப்டெம்பர் 25 , பி.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.சந்ரு, செ.திவாகரன்

மீன்களை ஏற்றிச்சென்ற சிறிய ரக லொறியொன்று நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா கிரிமிட்டி சந்தியில்  திங்கட்கிழமை  (25) மாலை விபத்துக்குள்ளானதில் லொறியில் பயணித்த மூவர் பலத்த  காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என  பொலிஸார் தெரிவித்துள்ளனர் 

 

நுவரெலியாவிலிருந்து மெராயா நகருக்கு  நோக்கி மீன்களை ஏற்றிச்சென்று விற்பனை செய்துவிட்டு  மீண்டும் மெராவிலிருந்து நுவரெலியா  நோக்கி பயணிக்கும் போதே குறித்த மீன் லொறி வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையால் வீதியை விட்டு விலகி சுமார் 70 அடி ஆழமான பள்ளத்துக்குள் விழுந்துள்ளது எனத் தெரிவித்த நானுஓயா பொலிஸார்,  சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X