Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Janu / 2024 ஒக்டோபர் 22 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலவாகம பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து திருடப்பட்ட சுமார் நான்கு லட்சத்து ஏழாயிரம் ரூபாய் பெறுமதியுடைய இருநூற்று நான்கு கிலோ கிராம் மிளகு தொகையை படல்கும்புரை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த 20 ஆம் திகதி வீட்டார் வெளியே சென்றிருந்த போது , ஜன்னல் வழியாக வீட்டுக்குள் புகுந்த இனந்தெரியாத ஒருவர் வீட்டின் அறையொன்றில் மூட்டைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மிளகு தொகையை திருடிச் சென்றுள்ளார்.
இது தொடர்பில் வீட்டார் , பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, விசாரணைகளை ஆரம்பித்த படல்கும்புரை பொலிஸார் பஸ்ஸரை வீதியில் உள்ள வீடொன்றிலிருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த மிளகுப் பொதியை கண்டுபிடித்துள்ளனர்.
இது தொடர்பில் வீட்டின் உரிமையாளரிடம் வினவிய போது தனது நண்பர் ஒருவர் குறித்த மிளகை பின்னர் எடுத்துச் செல்வதாக கூறி, விட்டுச் சென்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபரை கைது செய்த பொலிஸார் அவர் போக்குவரத்திற்கு பயன்படுத்திய கெப் வண்டியையும் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் மொனராகலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago
7 hours ago