2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

மின்பிறப்பாக்கி புகையால் 10 பேர் பாதிப்பு

Editorial   / 2023 ஒக்டோபர் 20 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஆ.ரமேஸ்,பி.கேதீஸ்,கௌசல்யா

தலவாக்கலை நகரில் இயங்கும் ஆடையகத்தில்   பணியாற்றி வரும் பத்து பேருக்கு திடீரென ஏற்பட்ட சுவாச பிரச்சினை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தலவாக்கலை நகரில் மின்சாரம் துன்டிக்கப்பட்ட நிலையில் குறித்த ஆடையகத்தில்  மின்பிறப்பாக்கி (ஜெனரேட்டர்) இயக்கப்பட்டுள்ளது.

மின்பிறப்பாக்கியில் இருந்து  வெளியான புகையினால் ஆடையகத்தில் பணியாற்றிய 9 பெண்கள் உட்பட ஆண் ஒருவருக்கு மூச்சி திணறல் ஏற்பட்டு மயங்கியுள்ளதுடன் அதிகமாக இருமலும் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பாதிக்கப்பட்ட ஊழியர்களை லிந்துலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்த பின் மேலதிக சிகிச்சைக்காக இவர்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டு தீவீர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .