2025 பெப்ரவரி 05, புதன்கிழமை

மலையகத்தில் கரும்புக்கு தட்டுப்பாடு

Editorial   / 2025 ஜனவரி 13 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

துவாரக்ஷன்

உலக வாழ் தமிழர்கள் நாளைய தினம். தைப் பொங்கலை கொண்டாட உள்ளனர். உழவர்கள் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் நாளாகவே   தைப்பொங்கல் விழாவாக கொண்டாடுகின்றனர். 

மலையக மக்களும்  இத்தினத்தில் சூரிய பகவானுக்கு சூரிய பொங்கல் வைத்தல் ஆலயங்கள் மற்றும் வீடுகளில் விசேட பூஜைகள் நடத்தி  வழிபாடுகளில் ஈடுபடுதல் சுப காரியங்களை நடத்துவது என பல்வேறு நிகழ்வுகளை இத்தினத்தில் முன்னெடுக்கின்றனர்.

இவ்வாறான நிகழ்வுகள் நடத்தும் போது கரும்பு மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. பூஜை வழிபாடு செய்வதற்கு வீடுகள், ஆலயங்கள் மற்றும்  வேலைத்தளங்கள்  ஆகியவற்றை அலங்கரிப்பதற்கு இந்துக்கள் கரும்புகளை பயன்படுத்துகின்றனர். 

இருந்த போதிலும் கரும்பு தட்டுப்பாடு காரணமாக இவ்வாறான விடயங்களை முன்னெடுக்க முடியாத சூழ்நிலைக்கு மலையகத்தில்  வாழும்  மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

வர்த்தகர்கள் கரும்புகளை வெளி மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்டு  நகரங்களில் விற்பனை செய்கின்றனர்.

கரும்பு ஒரு ஜோடி 350 முதல் 500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. உதாரணமாக ஒரு தோட்டத்தை எடுத்துக் கொண்டால் 300 வீடுகள் காணப்படுகிறது. ஒரு வீட்டுக்கு இரண்டு என்ற அடிப்படையில் கரும்புகள்  கொள்வனவு செய்ய வேண்டும்.  கிட்டத்தட்ட 600 கரும்புகள் தேவைப்படுகின்றன.‌‌ இவ்வாறு எடுத்துக் கொண்டால் இலட்சக்கணக்கான கரும்புகளை தைப்பொங்கல் காலங்களில் மலையக பிரதேசத்திற்கு தேவைப்படுகின்றன.

அதிக குடும்பங்களுக்கு கரும்புகள் கிடைப்பதற்கு வாய்ப்பு இருப்பதில்லை. பொருளாதார சிக்கலுக்கு மத்தியில் தைப்பொங்கல் கொண்டாடும். மக்கள் கரும்பினை  பெற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலைக்கு மத்தியில் உழவர் திருநாளாம் தைப்பொங்கல் கொண்டாடுகின்றனர். 

 

எதிர்காலத்தில் இவ்வாறான நிலை ஏற்படாமல்  பெருந்தோட்டப் பகுதியில் கைவிடப்பட்டுள்ள தரிசு நிலங்களில்  கரும்பு பயிர் செய்கையை முன்னெடுப்பதற்கு.

அரசாங்க ஒரு திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறான திட்டத்தை முன்னெடுக்கும் போது அதிகமானோருக்கு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்துவதற்கு வாய்ப்பாக அமையும். அத்தோடு கரும்பு ஏற்றுமதியும் மலையகத்திலிருந்து.செய்ய முடியும்  எனவே இவ்வாறான திட்டங்களை முன்னெடுப்பதற்கு பல்வேறு தரப்பினரும் முன்வருவது காலத்தின் கட்டாயமாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X