2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

மலையகத்திற்கு பொலிஸார் எச்சரிக்கை

Janu   / 2023 செப்டெம்பர் 20 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த சில வாரங்களாக மத்திய மலைநாட்டில் நாட்டில் நிலவிய சீரற்ற வானிலையினை தொடர்;ந்து மத்திய மலைநாட்டில் பல பிரதேசங்களில் தொடர்ச்சியாக மழையுடனான வானிலை நிலவி வருகிறது.

இந்நிலையில் ஒரு சில பிரதேசங்களுக்கு காலை வேலையில் சீரான வானிலை காணப்பட்டதுடன் பகல் வேலையில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.

மலையக பிரதேசங்களில் கடும் பனிமூட்டம் அடிக்கடி காணப்படுவதனால் இந்த வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக செலுத்துமாறு பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

பனிமூட்டம் காணப்படும் பிரதேசங்களில் பயணிக்கும் போது தமக்குரிய பக்கத்தில் வாகனத்தின் முகப்பு விளக்குகளை மிளிரச் செய்தவாறு பயணிப்பதன் மூலம் வாகன விபத்துக்களை தவிர்த்துக் கொள்ளலாம் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

செ.தி.பெருமாள்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X