Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 25, வெள்ளிக்கிழமை
Mithuna / 2024 ஜனவரி 31 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கடந்த சில நாட்களாகவே மரக்கறிகளின் விலை அதிகரித்து காணப்படுகின்றது . மரக்கறி விலைக்கு எதிராக நுவரெலியாவில் அனைத்து வகையான பழங்களின் விலையும் உயர்ந்துள்ளதாக பழங்கள் மொத்த வியாபாரிகள், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், தற்போது வரி அதிகரிப்பால் உற்பத்திச் செலவு அதிகரிப்பால் பழங்கள் விலையில் பெரிய அளவில் அதிகரிக்கவில்லை எனவும் கடந்த மாதங்களில் பெய்த மழை காரணமாகவும் , இறக்குமதிச் செலவு உயர்ந்துள்ளதால் பழங்களின் விலை அதிகரித்துள்ளதாகப் பழ விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதன் படி நெல்லி 1 கிலோ கிராம் விலை 1200 ரூபாவாகவும், சிவப்பு திராட்சை 1 கிலோ கிராம் விலை 2500 ரூபாவாகவும், 1 கிலோ கிராம் அன்னாசிப்பழத்தின் விலை 700 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது அத்துடன் ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட ஏனைய பழங்களின் விலையும் அதிகரித்துக் காணப்படுகின்றன.
செ.திவாகரன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago