2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை

மண்மேடு விழுந்ததில் குழந்தை பலி

Editorial   / 2024 ஜூன் 05 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேகாலை, மங்களகம, குருந்திய வராஹேன கிராமத்தில் வீடொன்றுக்கு அருகாமையில் மூன்றரை வயதுக் குழந்தையின் மீது மண்மேடு விழுந்ததில் அக்குழந்தை உயிரிழந்துள்ளது. கவிந்து ஷெஹந்தா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.

வீட்டின் பின்புறத்தில் பாதுகாப்பான பக்கச்சுவர் அமைப்பதற்காக காலை முதல் கரை வெட்டப்பட்டிருந்ததாகவும், அங்கு விளையாடிக் கொண்டிருந்த போது குழந்தையின் மீது மண்மேடு விழுந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அயலவர்களின் உதவியுடன் குழந்தையை மீட்டு கேகாலை போதனா வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் குழந்தை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X