Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 03, வியாழக்கிழமை
Janu / 2025 மார்ச் 16 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுளை மாவட்டம் பூனாகலை, கபரகலை தோட்டத்தில் 2023ம் ஆண்டு மார்ச் மாதம் மண் சரிவினால் சுமார் 51 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு கடந்த இரண்டு வருட காலமாக பூனாகலை மாகந்த தேயிலை தொழிற்சாலையில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருந்தார்கள் .
குறித்த 51 குடும்பங்களுக்கும் சனிக்கிழமை (15) அன்று 10 பேர்ச் காணியில் நிரந்தரமான வீடுகளை அமைத்து கொடுப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்டது.
பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் K.V சமந்த வித்யாரத்ன, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில விஜயசேகர, அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்தகீர்த்தி, நிர்வாகப் பிரிவின் மேலதிக செயலாளர் தீப்தி குணரத்ன, இராணுவ தளபதி லெப்டினல் ஜெனரல் வசந்த ரொட்ரிகோ, பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் காமினி மஹகமகே. உட்பட பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ், அம்பிகா சாமுவேல் மற்றும் பிரதேச செயலாளர் தோட்ட முகாமையாளர் உட்பட பலரும் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.
10 பேர்ச் காணியுடன் குறித்த வீடுகளை நிர்மாணிப்பதற்கு ஒரு வீட்டுக்கு சுமார் 28 லட்சம் செலவிடப்படவுள்ளதுடன் . எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் பயனாளிகளுக்கு வீடுகளை கையளிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
29 minute ago
33 minute ago
5 hours ago