2024 டிசெம்பர் 18, புதன்கிழமை

முகநூல் காதல் ; நண்பியின் வீட்டிற்கு சென்ற சிறுமி வன்புணர்வு

Janu   / 2024 டிசெம்பர் 18 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

முகநூல் ஊடாக  அறிந்துக்கொண்ட 17 வயதுடைய சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞன் புத்தல பொலிஸாரால்  செவ்வாய்க்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தல பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய சிறுமி ஒருவர்  படல்கும்புரை பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய இளைஞனை கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் முகநூல் ஊடாக  அறிந்துக்கொண்டு அவருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த சிறுமி கடந்த 16ம் திகதி தனது நண்பியின் வீட்டிற்கு சென்ற நிலையில் காதலனையும் சந்தித்துள்ளார். அதன் பின்னர்,குறித்த இளைஞன், சிறுமியை வீட்டில் விடுவதாக கூறி முச்சக்கர வண்டியில் ஏற்றிச் செல்லும் போது, ​​புத்தல வீதியில் உள்ள தேக்குமரக்காட்டுக்கு அருகில் முச்சக்கர வண்டியை நிறுத்தி  சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது தொடர்பில் குறித்த சிறுமி தாய், தந்தையிடம் தெரிவித்ததையடுத்து அவர்கள் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டிற்கு பின்னர் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்   சிறுமி வைத்திய பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தல பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .