Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Janu / 2024 ஜூன் 20 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
நுவரெலியா மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் போஷாக்கு குறைப்பாடு காரணமாக பாதிக்கப்பட்டு வருவதாக நுவரெலியா மாநகரசபை சுகாதார பிரிவினரால் அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில் போஷாக்கு குறைப்பாடு காரணமாக பாதிக்கப்பட்டு வரும் குழந்தைகளின் பெற்றோருக்கான விழிப்புணர்வு நிகழ்வொன்று நுவரெலியா மாநகர சபை சுகாதார நிலையத்தில் புதன்கிழமை (19) மாலை நடத்தப்பட்டது.
நுவரெலியா சர்வோதய அமைப்பு மற்றும் யுனிசெப் நிறுவனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் மாநகரசபை சுகாதார நிலைய அதிகாரியின் தலைமையில் நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு நிகழ்வில் மாநகர சபை அதிகார பிரதேசத்திற்குட்பட்ட பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது போஷாக்கு குறைப்பாட்டை நிவர்த்திக்கும் வகையில் ஊட்டச்சத்து நிறைந்த பல உணவு வகைகள் அறிமுகம் செய்யப்பட்டதுடன் இதன் பயன்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்த விழிப்புணர்வு செய்யப்பட்டது .
மேலும் நுவரெலியா மாவட்டத்தில் அண்மைக்காலமாக போஷாக்கு குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டு வரும் குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில் இதில் வறுமைக்கு
கீழ் வாழும் பெருந்தோட்ட பிரதேச தாய்மார்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
எனவே இவர்களுக்கான போஷாக்கு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த யுனிசெப் நிறுவனம் முன் வந்து தோட்டவாரியாக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago