2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

Janu   / 2023 ஒக்டோபர் 19 , பி.ப. 03:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கதிர்காமம் காவந்திஸ்ஸபுர பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளினால் 5 போலி 5000 ரூபாய் நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெபரவெவ கமுனுபுர பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபர் வைத்திருந்த 5 நாணயத்தாள்களும் ஒரே இலக்கத்தில் இருந்த்தாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட  நபர் பெரலிஹெல குடாகம்மான 3  பாடசாலையில் ஆய்வக அதிகாரியாக கடமையாற்றியுள்ளார்.  கடந்த வருடம் இரண்டு போலி 5000 ரூபாய் நாணயத்தாள்கள் மற்றும் ஒரு அச்சுப்பொறியுடன் (ப்ரின்டர் ) கைது செய்துள்ளமை காரணமாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .