Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Janu / 2024 ஜூலை 14 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1700 ரூபாய் சம்பளம் இதுவரை கிடைக்காத காரணத்தினால் உடனடியாக சம்பளத்தை வழங்க வேண்டும் என கோரியும் இதற்கு ஒத்துழைப்பு வழங்காத கம்பெனிகள் வெளியேறுமாறு கோரியும் ஞாயிற்றுக்கிழமை (14) காலை 10 மணி தொடக்கம் 12 மணி வரை தலவாக்கலை , நானுஓயா தோட்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்
இதன்போது 80க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன் “ அரசாங்கம் 1700 ரூபாய் வழங்க வேண்டும் என அறிவித்த போதிலும் இதுவரை கம்பெனிகள் இதனை வழங்கவில்லை தாங்கள் மிகவும் கஷ்டப்பட்டு தொழில் செய்த போதிலும் எங்களுக்கு வழங்க வேண்டிய சம்பளத்தை வழங்க முடியாத நிலையில் இருக்கின்ற கம்பெனிகள் உடனடியாக வெளியேறுமாறு தாங்கள் படும் கஷ்டங்கள் தொடர்பாகவும் எவரும் ஏறெடுத்து பார்ப்பதில்லை ” அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர் .
மேலும் , ஆர்ப்பாட்டங்கள் நடத்தினாலும், தோட்ட நிர்வாகம் அதனை நடத்த வேண்டாம் என அச்சுறுத்துவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர் .
துவாரக்ஷான்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago