2025 டிசெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

போதையில் தடுமாறி விழுந்தவர் மரணம்

Janu   / 2023 செப்டெம்பர் 24 , பி.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியாவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடம் ஒன்றில் தொழில் புரிந்து வந்த  இரத்தினபுரிய மஹவலவத்த கீழ் பிரிவைச் சேர்ந்த சுப்பிரமணியம் வடிவேலு (வயது 59)  கட்டடத்தின் முதலாவது மாடியிலிருந்து சனிக்கிழமை (23)  கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

அன்றையதினம் இரவு அவர் மதுபோதையில் இருந்ததாகவும்  தங்கியிருந்த இடத்தில் இவரை இரவு முழுவதும் காணவில்லை எனவும்  ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியளவில் தேடிப்பார்த்த  இறந்த நிலையில் கிடந்ததாக சக தொழிலாளர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

சடலம் தொடர்பான மரண விசாரணைகளின் பின்னர் சடலம் நுவரெலிய மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு பிரேத பரிசோதனை இடம்பெற்றதன் பின்பு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக தெரிவித்த  நுவரெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

செ.திவாகரன்

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .