Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Janu / 2025 பெப்ரவரி 06 , பி.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
சொகுசு பேருந்தும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் வியாழக்கிழமை (06) காலை 11 மணியளவில் நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியின் பிளாக்ஃபுல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஹட்டனில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த பேருந்து மீது எதிர் திசையில், நுவரெலியாவில் இருந்து பிளாக்பூல் நோக்கி பயணித்த லொறி பிரதான வீதியின் குறுக்கே கவனக்குறைவாக திருப்பும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் பேருந்தும் லொறியும் சேதமடைந்துள்ளதுடன் , விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .