Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 04, வெள்ளிக்கிழமை
Janu / 2025 பெப்ரவரி 02 , பி.ப. 06:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் முன் சக்கரத்தில் சிக்கி பெண் ஒருவர் படுகாயமடைந்து டிக் ஓயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (02) இடம்பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி பயணிக்கும், அவிசாவளை டிப்போவுக்கு சொந்தமான குறித்த பேருந்து ஹட்டன் பேருந்து நிலையத்திற்குள் நுழையும் போது முன்பாக பயணித்த பெண் ஒருவர், பேருந்தின் முன்பக்க சக்கரத்தில் சிக்கி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
நோர்வூட் தியசிறிகம பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய பெண் ஒருவரே விபத்தில் காயமடைந்துள்ளார்.
குறித்த பேருந்தின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் போக்குவரத்து பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .