Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Janu / 2024 ஜூன் 04 , பி.ப. 12:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கண்டி , ஹதறலியத்த பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் 12 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் இரு மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில், ஒருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹதரலியத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (31) அன்று பாடசாலை முடிந்து வீடு திரும்பும் வழியில் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளதுடன் அதில் ஒருவர் தன்னிடமிருந்த பேப்பர் கட்டர் மூலம் மற்றைய மாணவனின் கையை அறுத்துள்ளார் .
வீவலையை சேர்ந்த 17 வயதுடைய மாணவனே இதில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
பேப்பர் கட்டர் மூலம் கையை அறுத்து காயப்படுத்திய மாணவன் துங்கும்புர பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர் .
மேலும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .