2025 ஏப்ரல் 27, ஞாயிற்றுக்கிழமை

பெண்ணின் மோதிரங்களை கழற்றிய தாதி கைது

Editorial   / 2023 ஒக்டோபர் 26 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷேன் செனவிரத்ன

மாத்தளை மாட்டிபொக்க பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தேவைக்காக கட்டுகஸ்தோட்டை நகருக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு  திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. அதனையடுத்து அவர் கட்டுகஸ்தோட்டை   வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

 அப்பெண் அணிந்திருந்த நான்கு மோதிரங்களை திருடிய சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலையின் தாதி ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். .

  குறித்த பெண் தனது வீட்டுப் பணிப்பெண்ணுடன் கட்டுகஸ்தோட்டை கொண்டதெனிய பகுதிக்கு புதன்கிழமை (25) சென்று கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு கட்டுகஸ்தோட்டை  வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அடிப்படை சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின்னர்  மேலதிக சிகிச்சைகளுக்காக  கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். 

கட்டுகஸ்தோட்டை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி பல மோதிரங்களை அணிந்திருந்ததையும் கண்ட வைத்தியசாலை ஊழியர்கள், கண்டி தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போது மோதிரங்களை காணவில்லை என தெரியவந்தது.  இது தொடர்பில் வைத்தியசாலை ஊழியர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொலிஸூக்கு தகவல் கொடுத்தனர்.

 

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய பொலிஸார்  பொலிஸ் நாயை அனுப்பி மோப்பம் பிடித்தனர்.  அந்த நாய் சந்தேகப்பட்ட தாதியின் அருகில் சென்று நின்றுக்கொண்டது. அதன்பின்னர் அந்த தாதியை சந்தேகத்தின் பேரில் கைது செய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .