Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 22, செவ்வாய்க்கிழமை
Janu / 2024 நவம்பர் 12 , மு.ப. 09:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி சென்ற இரவு அஞ்சல் ரயிலில் பயணித்த யுவதி ஒருவர் ஹப்புத்தளை புகையிரத நிலையத்தில் வைத்து ரயிலில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்துள்ள சம்பவம் செவ்வாய்க்கிழமை (12) இடம் பெற்றுள்ளது.
அரலிய உயன, மாவடிவில, ரத்கம பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய ரிட்சா சந்தமணி என்ற பல்கலைக்கழக மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் உட்பட 18 பேர், எல்ல பிரதேசத்திற்கு சுற்றுலா வந்து கொண்டிருந்துள்ளனர். காலை 6.30 மணியளவில் ரயில் ஹப்புத்தளை நிலையத்தில் நிறுத்தப்பட்ட போது, ரயிலில் இருந்து இறங்கி மீண்டும் ரயிலில் ஏற முற்பட்ட போது ரயிலில் இருந்து விழுந்துள்ளதுடன் இதன் போது அவருடைய இடது கால் மீது ரயில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த பெண்ணை உடனடியாக தியத்தலாவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago